சென்னையில் நேற்று அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதைத் தவெக அரசால் தடுக்க முடியும். ஆனால் தமிழக மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது. இதனால், கோடிக்கணக்கான பக்தா்களின் மனதை தமிழக அரசு புண்படுத்தியுள்ளது. இன்று தீபம் ஏற்றாதவா்கள், நாளை பக்தா்கள் கோயிலுக்குள் செல்வதை தடுப்பாா்கள்
உலகத்தரத்தில் மதுரை ரெயில் நிலைய சந்திப்பு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரெயில் நிலைய உச்சியில் தீபம் ஏற்றப்படும். அதனால், உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்த போவதில்லை" என்றார்.
இதற்கு பல தரப்பு கட்சிகளும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் இந்த பேச்சுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
"புனரமைக்கப்படும் மதுரை ரயில் நிலையத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும்" என்று ரயில்வே துறை அமைச்சர் பேசியுள்ளார்.
அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நீங்களோ. உங்களின் கூட்டமோ ஒருபோதும் ரயில் நிலையத்தின் உச்சியில் தீபமேற்ற முயற்சிக்க மாட்டீர்கள்; ஏனென்றால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் எந்த தர்ஹாவும் இல்லை
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.