தமிழக செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை - மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் ஆலோசனை!

16 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக திமுக ஆலோசனை நடத்தியுள்ளது.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, தலைமை செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மாவட்டக் செயலாளர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, நே. சிற்றரசு, மயிலை த. வேலு ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT