சென்னை, வில்லிவாக்கத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் வீட்டு வசதி வாரிய வீடுகள் மிகவும் மோசமாக உள்ளன. மோசமான வீடுகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் தற்போது பேட்ச் ஒர்க் நடைபெறுகிறது.
மழையின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் விரைந்து பேட்ச் ஒர்க் செய்யப்படுகிறது.
புதிய டெண்டர் விடப்பட்டு அடுத்தாண்டு மழைக்கு முன்னர் அனைத்து சாலைகளும் முழுமையாக சரி செய்யப்படும்.
முந்தைய ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்த காவல்துறையை முதலமைச்சர் விஜய் மீட்டு வருகிறார்.
திமுக ஆட்சியில் காவல்துறையை செயல்படாமல் தடுத்து துறையையே சீரழித்து வைத்திருந்தனர்.
திமுக ஆட்சியில் காவல்துறையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என கனிமொழி தான் பதில் தர வேண்டும்.
பொய்யான பரப்புரை, ஸ்டாலின் எத்தனை வீடியோ வேண்டுமானாலும் போடட்டும், நாங்கள் மக்களுக்காக பணியாறறி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.