தமிழக செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் 4, 5ம் தேதிகளில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்களில் மழை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சிணண, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,2ம் தேதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

3ம் தேதி மிதமான மழை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 3ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் 4, 5ம் தேதிகளில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.