தமிழக செய்திகள்

புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

மற்றொரு வழக்கு தொடர்பாக கடந்த வாரம் மகேந்திரனை திருப்பூர் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

சந்தேகமடைந்த சிறைக் காவலர்கள் மகேந்திரனிடம் சோதனை செய்தபோது அவர் உடலில் மறைத்து வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் கள்ளர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவரை வழிப்பறியில் ஈடுபட்டதாக பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருந்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு

இந்நிலையில், மற்றொரு வழக்கு தொடர்பாக கடந்த வாரம் மகேந்திரனை திருப்பூர் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். அப்போது, சந்தேகமடைந்த சிறைக் காவலர்கள் மகேந்திரனிடம் சோதனை செய்தபோது அவர் உடலில் மறைத்து வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். அவருக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT