தமிழக செய்திகள்

புதுச்சேரி சிறுமி விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை- ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும்.போதையில்லா தேசத்திற்கு பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.

புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி சிறுமி படுகொலை விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசவன் கூறியிருப்பதாவது:-

இந்த சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது.

போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம்.

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தை சீரழிக்கும் போதை கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும்.

போதையில்லா தேசத்திற்கு பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT