மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் மறைந்த மு.க.முத்துவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " கலைஞரின் புதல்வரும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி பெரும் துயரைத் தருகிறது. அவருக்கு என் இரங்கல்கள். அவர்தம் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.