மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைக்குச்சி, செவித்திறன் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த உதவிகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான, “கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்” காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அவர்கள், மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் உருவப்படங்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் நடைக்குச்சி (Walking Stick), செவித்திறன் கருவி (Hearing Aid), சக்கர உதவியுடன் நடப்பதற்கான Rollator உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி உபகரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்த உதவி உபகரணங்கள், பயனாளிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிதின், இணைச் செயலாளர் சம்பத், நரசிம்மநாயக்கன்பாளையம் நகரச் செயலாளர் கார்த்திகேயன், இணைச் செயலாளர் பூபதி, மகளிர் அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.