தமிழ்நாடு செய்திகள்

இளைஞரணி படையை சிறப்பாக வழிநடத்தி செல்லும் உதயநிதிக்கு பாராட்டுகள்- மு.க. ஸ்டாலின்

45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தி.மு.க. இளைஞரணி. அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்.

Maalaimalar

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தி.மு.க. இளைஞரணி. இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி உதயநிதிக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

கழகக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.