தமிழக செய்திகள்

TN Assembly Election | சீர்காழியில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்

சீர்காழி மார்க்கெட்டிற்குள் சென்று வணிகர்கள், பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபயிற்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீர்காழி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சீர்காழி மார்க்கெட்டிற்குள் சென்று வணிகர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த முதலமைச்சர், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சீர்காழியில் திட்டை சாலை உழவர் சந்தை முதல் கச்சேரி சாலை புதிய பேருந்து நிலையம் வரை முதலமைச்சர் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

சீர்காழியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பொதுமக்கள் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.