தமிழக செய்திகள்

கோட் அணிவதும், பட்டு வேட்டி அணிவதும் தான் செய்தியா? - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

ஆட்சியை பற்றி வரும் செய்திகளை ஆட்சியாளர்கள் படியுங்கள். படித்து உண்மையை கண்டுபிடித்து, அதற்குரிய நடவடிக்கை எடுங்கள்.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* ஆற்றலுக்கும், கொள்கை பிடிப்புக்கும் இலக்கணம் ஆற்காடு வீராசாமி.

* சிறைச்சாலையில் எனக்கு அறிவுரை வழங்கியவர் ஆற்காடு வீராசாமி.

* மிசாவில் ஏற்பட்ட தழும்பு இன்றும் என் கையில் உள்ளது.

* கோட் அணிவதும், பட்டு வேட்டி அணிவதும் இன்று செய்திகளாகி கொண்டிருக்கிறது.

* முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடியது தான் செய்தியாக வருகிறது.

* ஆட்சியை பற்றி வரும் செய்திகளை ஆட்சியாளர்கள் படியுங்கள். படித்து உண்மையை கண்டுபிடித்து, அதற்குரிய நடவடிக்கை எடுங்கள் என்பதே என் அன்பான வேண்டுகோள்.

* ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி திராவிட முன்னேற்றக்கழகம்.

இவ்வாறு அவர் கூறினார்.