தமிழக செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலின் 2-ந்தேதி பிரசாரம்

மு.க. ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.

இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் தொகுதியில் வருகிற 2-ந்தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக அவர் வருகிற 1-ம் தேதி கோவை செல்கிறார். அங்கு இரவு தங்கி விட்டு 2-ம் தேதி கார் மூலம் தாராபுரம் தொகுதிக்கு செல்கிறார். அங்கு காரில் ரோடு ஷோ சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

பொதுக்கூட்டம்

மாலையில் தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தோழமை கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பிரசார கூட்டத்திற்கு பிறகு மறுநாள் 3-ம் தேதி மதுராந்தகம் சென்று அங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

இதையொட்டி மு.க. ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT