தமிழக செய்திகள்

சாதி - மதம் - அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்! - மு.க.ஸ்டாலின்

சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்!

சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, சாதி - மதம் - அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்!

இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - பாராளுமன்ற உறுப்பினர்கள் - மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.