தமிழக செய்திகள்

காமராஜருக்கு மகனைப் போன்று இறுதிச் சடங்குகளை செய்தவர் கலைஞர் - மு.க.ஸ்டாலின்

மறைந்த காமராஜருக்கு கலைஞர் மெரினாவில் இடம் கொடுக்க மறுத்ததாக இபிஎஸ் பொய் பிரசாரம் செய்கிறார்.

விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* சங்கி கூட்டங்களை போல வாட்ஸ் அப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார் இபிஎஸ்.

* அடுத்தடுத்த பொய்களை கூச்சமே இல்லாமல் பேசுகிறார்.

* மறைந்த காமராஜருக்கு கலைஞர் மெரினாவில் இடம் கொடுக்க மறுத்ததாக இபிஎஸ் பொய் பிரசாரம் செய்கிறார்.

* காமராஜர் உடல் அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்தவரே கலைஞர் கருணாநிதி தான்.

* காமராஜரின் உடலை முப்படைகளிடம் இருந்து பெற்று பீரங்கி வண்டி மீது ஏற்றியவர் கலைஞர் கருணாநிதி.

* பெருந்தலைவர் காமராஜருக்கு மகனைப் போன்று இறுதிச் சடங்குகளை செய்தார் கலைஞர் கருணாநிதி.

இவ்வாறு அவர் கூறினார்.