திருச்சி உழவர் சந்தை பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* அதிமுக - பாஜக கூட்டணிக்கு இந்த தேர்தலிலும் படுதோல்வி தான்.
* சம்பந்திக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்தியவர் இ.பி.எஸ்.
* அதிமுகவை அடிமை கூட்டமாக மாற்றியதுதான் இபிஎஸ் சாதனை.
* தேர்தல் வாக்குறுதியாக நான் அறிவித்துள்ள ரூ.8000 கூப்பன் திட்டம் பற்றியே பேச்சாக உள்ளது.
* திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது என சிரித்துக்கொண்டே கூறியவர் இபிஎஸ்.
* தனது பதவியை காப்பாற்றி கொள்ள பாதம் தாங்கியாக இருக்கிறார் இபிஎஸ்.
* சிஏஏ சட்டத்தால் எந்த இஸ்லாமியர் பாதிக்கப்பட்டனரா என கேட்டவர் இபிஎஸ்.
* சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒடுக்கப்பட்டபோது 70 பேர் உயிரிழந்தனர்.
* சிஏஏ சட்டத்தை இபிஎஸ் ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?
* பாஜகவுடன் இணைந்து முழு சங்கியாகவே மாறி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
* அதிமுக கூட்டணியில் பிரச்சனை இல்லை எனில் அத்தனை முறை ஏன் டெல்லி செல்ல வேண்டும்?
* சிஏஏ சட்டம் நிறைவேற காரணமாக இருந்து துரோகம் செய்தது அதிமுக மற்றும் பாமக.
* தமிழ்நாட்டில் அமைதியான சூழலும் மனித வளமும் இருப்பதால்தான் எண்ணற்ற முதலீடுகள் வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.