தமிழக செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை காப்பாற்ற டெல்லிக்கு காவடி தூக்குகிறார் இபிஎஸ் - மு.க.ஸ்டாலின்

அதிமுக என்ற கட்சி பாஜகவின் கொத்தடிமை கட்சியாக மாறிவிட்டது.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளின் வேட்பாளர்கள், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* FCRA மசோதா தொடர்பாக அதிமுகவின் நிலைப்பாடு என்ன?

* FCRA மசோதா எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா?

* இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்யும் பணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி விட்டார்.

* அதிமுக என்ற கட்சி பாஜகவின் கொத்தடிமை கட்சியாக மாறிவிட்டது.

* அதிமுக பொதுச்செயலாளர் பதவியை காப்பாற்ற இபிஎஸ் காவடி தூக்குகிறார்.

* 2011, 2016-ல் அளித்த வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.