தமிழக செய்திகள்

மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

விலைவாசி உயர்வே இந்த ஆட்சியின் லட்சணத்தை சொல்வதற்கு போதும் என்றார்.

தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட்டன. அதன்பின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மக்களுக்கு உதவாத இந்த உதவாக்கரை ஆட்சியில் என்ன நடக்கிறது?

நான்கு மாதத்துக்கு முன்னாடி அரிசி பருப்பு, சர்க்கரை எல்லாம் என்ன விலை விற்றது?

இன்னைக்கு என்ன விலையில் விற்கிறது. இந்த விலைவாசி உயர்வே இந்த ஆட்சியின் லட்சணத்தை சொல்வதற்கு போதும்.

கொளத்தூர் மக்களுக்கு நன்றி

மாண்பு இழந்த பேரவை நிகழ்வுகளை பார்க்கும் பொழுது கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை டைவர்ஷன் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனது மிசா கைது பற்றிய யாருக்கும் நிரூபிக்க வேண்டியது இல்லை.

எனது தியாகத்திற்கு மதிப்பெண் போடும் அருகதை இல்லை.

கையில் வைத்த மை காய்வதற்கு முன்னமே ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள்.

ஜனநாயகம் மரணமடைந்து இடைத்தேர்தல் வந்துள்ளது.

ஒரே நாளில் 8 கொலைகள் அரங்கேறியுள்ளன.

த.வெ.க.வின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

ஜென் சி இளைஞர்களை கவர, அவர்களது மொழியிலேயே பேச வேண்டும்.

தமிழ்நாட்டைக்காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT