தமிழக செய்திகள்

5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை தி.மு.க. அரசு மாற்றி உள்ளது - மு.க.ஸ்டாலின்

பள்ளிக்கல்வியில் 19 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.8 லட்சம் மாணவிகள் புதுமை பெண்கள் திட்டத்தில் பலன் பெற்றுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* பள்ளிக்கல்வியில் 19 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.

* 8 லட்சம் மாணவிகள் புதுமை பெண்கள் திட்டத்தில் பலன் பெற்றுள்ளனர்.

* தி.மு.க. அரசு கொண்டு வந்த மாடல் பள்ளிகளால் ஐ.ஐ.டி.யில் மாணவிகள் பயில்கின்றனர்.

* கடந்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்றுள்ளது.

* 5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை தி.மு.க. அரசு மாற்றி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.