தமிழக செய்திகள்

வரலாற்றை மாற்றிய அம்பேத்கரின் பிறந்தநாள் வரலாற்று சிறப்புமிக்க நாள் - மு.க.ஸ்டாலின்

அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிக்க வழி என்ற நூலை தமிழில் வெளியிட்டவர் பெரியார். ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை முதலில் எடுத்துக்கூறியவர் எம்.சி.ராஜா.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* வரலாற்றை மாற்றிய அம்பேத்கரின் பிறந்தநாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்.

* தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாள், அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாள்.

* அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிக்க வழி என்ற நூலை தமிழில் வெளியிட்டவர் பெரியார்.

* சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றியவர் அம்பேத்கர்.

* ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை உயர வேண்டும் என்பதற்காகத்தான் சமத்துவ நாள் கொண்டாட்டம்.

* ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை முதலில் எடுத்துக்கூறியவர் எம்.சி.ராஜா.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT