மு.க.ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு ஆதரவா?- மு.க.ஸ்டாலின் பதில்

கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு ஆபிஸுக்கு செல்வதுபோல் வந்து விட்டு மாலை 6 மணிக்கு வீட்டுக்கு சென்றுவிடுகிறார்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு தி.மு.க. ஆதரிக்குமா என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பேசலாம் என பதிலளித்தார். பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அவர், த.வெ.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிரிக்கிறது என விமர்சித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

* இந்த ஆட்சி வரவேண்டும் என வாக்களித்தவர்களே இந்த ஆட்சி எப்போது ஒழியும் என நினைக்கின்றனர்.

* த.வெ.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

* சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகும் சம்பவங்கள் நடக்கின்றன.

* கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு ஆபிஸுக்கு செல்வதுபோல் வந்து விட்டு மாலை 6 மணிக்கு வீட்டுக்கு சென்றுவிடுகிறார்.

* நெருக்கடி நிலை, தடை, பொடா உள்ளிட்ட சட்டங்களை எதிர்கொண்டவர்கள், இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்றார்.

இதனிடையே, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு தி.மு.க. ஆதரிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மு.க.ஸ்டாலின், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும். பின்னர் பேசலாம் என்றார்.

SCROLL FOR NEXT