தமிழக செய்திகள்

ரஜினி - கமலாக மாறிய மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி... காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ வைரல் #mkstalin

ரஜினி - கமல் நடிக்கும் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ப்ரோமோ வீடியோவில் தீம் மியூசிக் ரெடியா இருக்கு என்று அனிருத் சொல்ல, யாரு ஹீரோ? என்று கமல்ஹாசன் கேட்க, கேட்குறாங்களா சொல்லுங்க ஜீ என்று ரஜினிகாந்த் சொல்ல இயக்குனர் நெல்சனும், அனிருத்தும் செய்வதறியாது திகைக்கின்றனர். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த ப்ரோமோ வீடியோவை எடிட் செய்து மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி முகத்தை வைத்து தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்த ப்ரோமோ வீடியோவை எடிட் செய்து மோடி - அமித் ஷா முகத்தை வைத்து தமிழக பாஜக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT