தமிழக செய்திகள்

கேப்டனின் புகழ் நீடுவாழ்க!- மு.க.ஸ்டாலின்

ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!

விஜயகாந்தின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரை அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

புகழ் நீடுவாழ்க!

ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!

அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி

பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க! என்று கூறியுள்ளார்.