SIR-க்கு பிந்தைய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு எழுதி உள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் கடிதத்துடன் இணைத்து மனு அளித்துள்ளார். அதில்,
* தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அவசர கதியில் எடுக்கப்பட்ட SIR நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.
* இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையையே பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கருத்தைப் பெற வேண்டும்.
* SIR-க்கு பிந்தைய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.