ஆதவ் அர்ஜூனா
தமிழக செய்திகள்

எட்டப்பனுக்கு அப்பனாக மாறிய மு.க. ஸ்டாலின்: ஆதவ் ஆர்ஜூனா கடும் விமர்சனம்

கலைஞர் மகன் மு.க. ஸ்டாலின் இன்று பச்சை துரோகி ஆகி சரணடைந்துள்ளார்.

த.வெ.க.-வின் சாதனை விளக்க வெற்றிக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆண்ட கட்சி, எதிர்க்கட்சி, புதிதாக உருவாகிய கட்சி, எப்போதும் கத்திக் கொண்டே இருக்கும் கட்சி, லெட்டர் பேர்டு கட்சி, யூடியூப் கட்சி, டுவிட்டர் கட்சி, எக்ஸ் கட்சி என எல்லோரும் சேர்ந்து சொன்னாங்க கனவு காணுங்கள் என்று. ஆனால், ஒரு தலைவர் 25 வருடத்திற்கு முன் கனவு கண்டார். அந்த கனவை நிறைவேற்றி 2026-ல் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வரலாற்றை உருவாக்கிய நம்முடைய தலைவர் அண்ணன் ஜோசப் விஜய்.

சில மதவாத சக்திகள் அண்ணன் பெயரை சொல்லச் சொல்கிறார்கள். இதனால் அண்ணன் ஜோசப் விஜய். இந்த பேரைச் சொல்லித்தான் நாங்கள் ஜெயிச்சோம்.

மதவாத அரசியல் இங்கு எடுபடாது

மதவாத அரசியல் இங்கு எடுபடாது. கியாரே செட்டிங்கா.., உங்கள் டயலாக்கை உங்களுக்கே சொல்கிறோம். யாரை வேண்டுமென்றாலும் கூட்டிட்டு வாங்க. ஏன் டெல்லியை வேண்டுமென்றாலும் கூட்டிட்டு வாங்க. இது தமிழ்நாடுடா..,

பேசி பேசி வளர்ந்த கட்சி திமுக. இன்னைக்கு பொய் பொய்யா பேசிக்கட்டு இருக்காங்க பார்த்தீங்களா (மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை குறித்து பேசிய வீடியோவை போட்டு காண்பித்து).,

கலைஞர் சண்டை போட்டார்

2001-ல் வாஜ்பாய் கூட்டணியில் இருந்து கொண்டு, தொகுதி மறுவரையறை வரும்போது 543 தான் இருக்க வேண்டும், 25 வருடம் நீடிக்க வேண்டும் என்று கலைஞர் சண்டைபோட்டு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்தார்.

கலைஞர் மகன் மு.க. ஸ்டாலின் இன்று பச்சை துரோகி ஆகி சரணடைந்துள்ளார். சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தபோது என்ன சொன்னீங்க?. எல்லோரும் ஒன்றாக நின்றார்கள். அதிமுக எதிர்த்து நின்றது. எதிர்த்து நின்றவர்களுக்கு கூட மரியாதை கொடுத்து விடலாம். தமிழக உரிமைக்கு நிற்பதாக கைகளை தூக்கி தற்போது துரோகியாக நிற்கிறார்களே, இதுதான் திமுக-வின் மிகப்பெரிய துரோகம்.

2019, 2021, 2024-ல் திமுக வெற்றி பெறுவதற்கு காரணம் பாஜக எதிர்ப்பு மனநிலை. அப்படி ஒரு விசயத்தை உருவாக்கினார்கள். ஊழல் செய்தாலும் தமிழ்நாட்டை பாதுகாக்க இது அண்ணாவின் கட்சி, சமூக நீதி கட்சி கொள்கையில் உறுதியாக இருக்கும் கட்சி என்று வாக்கு கேட்டதனால மக்கள் ஜெயிக்க வச்சாங்க.

2026-ல் மக்கள் ஒரு தலைவரை நம்பினாங்க. ஏன் தெரியுமா? என்ன ஆனாலும் டெல்லியின் அழுத்தத்திற்கு நம்முடைய அண்ணன் பணிய மாட்டார் என்று மக்கள் நம்பினார்கள். ஊழல் செய்யாமல் அண்ணன் நேர்மையான ஆட்சி கொடுப்பார் என்று பெண்கள், இளைஞர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

டெல்லியில சரண்

6 மாசம் எதிர்க்கட்சியாக இருந்த நிலையில் பயந்து டெல்லியில் போய் சரண் ஆகிவிட்டீர்கள். 2 வருட கட்சியின் தலைவரான எங்கள் அண்ணன், இந்தியாவிலேயே நிமிர்ந்து நிற்கும் தலைவராக உள்ளார். 75 வருட திமுக, 50 வருட அதிமுக சரண் அடைந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கான நிற்கிறாரே நம்முடைய தலைவர், இதுதான் வரலாறு.

எட்டப்பனுக்கு அப்பன்

வடஇந்தியா ஆதிக்கத்தை எதிர்த்தவன் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறான். தமிழ்நாட்டில் வரலாற்றை படிக்கும்போது எட்டப்பனை பற்றி படிப்போம். வீரப்பாண்டி கட்டபொம்மனுக்கு எதிராக போன எட்டப்பனை துரோகியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எட்டப்பனுக்கு அப்பனாக கலைஞரின் வாரிசு மு.க. ஸ்டாலின் மாறிய தருணம் இன்று. அதுதான் வரலாறு. வரலாறு எழுதும். திமுக இன்றோடு முடிந்து விட்டது. தமிழக அரசியலில் தவெக 65 முதல் 70 சதவீதம் வெற்றி பெறும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஒரு முடிவு மு.க. ஸ்டாலினுக்கு திமுக-வை அழித்த வரலாறு எழுதிக் கொடுக்கும்.

ஓ.பி.எஸ், இ.பி.எஸ். எம்.கே.எஸ். டெல்லியின் அடிமைகள். அம்மா அவர்கள் கஷ்டப்பட்டு உருவாக்குன அடிமை திமுக-வில் சேர்ந்துவிட்டது. இன்னொரு அடிமை டெல்லியில் போய் விழுந்துவிட்டது. உங்களுக்கு எல்லாம் அப்பனாக இருப்பேன் என்றார். அது அருள்வாக்கு. யாருக்கு அப்பன், எட்டப்பனுக்கு அப்பன். இன்னையில் இருந்து எட்டபனை மீறிய மு.க. ஸ்டாலின் எட்டப்பன். இதுதான் அவருடைய பெயர்.

வலியில் பேசுகிறேன்

வலியில் பேசிக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாடு எவ்வளவு ஆபத்தில் செல்லப்போகிறது தெரியுமா?. தென்மாநிலங்களில் 60 சதவீதம் பொருளாதாரத்தை டெல்லிக்கு கொடுக்கிறோம்.

என்ன ஒப்பந்தம் போட்டிருக்கிறார். நீட் வேண்டாம், ஜிஎஸ்டியை நீக்குங்கள், காவிரியில் தண்ணீர் திறந்த விட வேண்டும் என்றா ஒப்பந்தம் போட்டிருப்பார்கள்?.

துரைமுருகன் மீது FIR, கே.என். நேரு மீது FIR, ரோடு போடாமல் ரோடு போட்டதாக எ.வ. வேலு.

பையன் மாட்டிக்குவான்

தொகுதி மறுவரையின் பாவம் என்ன?. மணல் பிரச்சினையை தொட்டால் மருமகனிடம் போய் நிற்கும். சாராய வழக்கில் ரத்தீசை பிடித்தால் பையன் மாட்டிக்குவான். ED ஐந்து வருடமாக ஏன் வரவில்லை தெரியுமா? FIR இருந்தாதான் வர முடியும்.

எல்லோரும் மீது நடவடிக்கை எடுத்து FIR போட்டாச்சா., அங்கிருந்து அப்பா, இங்குள்ள அப்பாவை கூப்பிட்டாங்க. நல்லா மாட்டிகிட்டீங்க.., ஒழுங்கா சரண் அடைந்து விடுங்கள். இல்லை கட்சியே இருக்காது. 8 பேர் அரஸ்ட், சொத்து இருக்காது, மருமகன், பிள்ளை இருக்கமாட்டாங்க என்றதால் மொத்தமாக சரண் அடைந்து விட்டார்கள்.

தமிழ்நாட்டின் உரிமைக்காக முடிவு எடுத்திருக்கிறோம் என்று அறிக்கை. ஆளுங்கட்சியாக இருக்கும்போது தமிழ்நாட்டு நலனுக்காக முடிவு எடுக்கவில்லையா?. 50 சதவீதம் அதிகமாக கொடுப்பதா அமித் ஷா 6 மாதத்திற்கு முன்னதாக சொல்லிவிட்டாரு. புதிதாக சொல்லவில்லை.

அதிக தொகுதி வேண்டும் என்று போராடவில்லை. நீட் வேண்டாம் என்று போராடுகிறோம். ஜிஎஸ்டி வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கோம். காவிரியில் முடிவு எடுங்கள் என்று மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம். எதைப் பற்றியும் பேசவில்லை.

பாஜக தனது நிலையை தெளிவாக சொல்கிறது. அதிமுக அடிமைதான் என்பதை ஒத்துக் கொள்கிறது.

மு.க. ஸ்டாலின் பச்சை பொய்

தமிழ்நாட்டுக்கு தொகுதி அதிகம் கிடைக்கிறது. காங்கிரஸிடம் மாற்று திட்டம் இல்லை என்று மு.க. ஸ்டாலின் பேட்டி கொடுக்கிறார். வழி இல்ல என்கிறார். எவ்வளவு பச்சை பொய் பாருங்கள். 2001 போன்று 543-ஐ அப்படியே வையுங்கள். அதில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வாருங்கள். இதைத்தான் 6 மாதத்திற்கு முன்னாடி சொன்னார்கள். எல்லாரும் சொன்னாங்க. இந்த ஆப்சன் இருக்குதுல.

உங்களுடைய தந்தை கலைஞருக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை ஒரு பிள்ளையாக செய்துள்ளீர்கள் தெரியுமா?. தந்தைக்கு ஒரு துரோகம், மக்களுக்கு ஒரு துரோகம். சிறுபான்மை மக்களுக்கு முகத்தில் குத்துனீர்களே, அந்த துரோகம். இந்த துரோகம் தமழ்நாட்டில் எப்போதும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT