தமிழக செய்திகள்

மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்

மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசிரியர் தினத்தில் உறுதிகொள்வோம்!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இந்நாளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

சமுதாயத்திற்கு வழிகாட்டும் ஆசிரியர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்நாள் அமைகிறது.

இந்நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!

நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் AI காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!

அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசிரியர் தினத்தில் உறுதிகொள்வோம்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT