தமிழக செய்திகள்

1000 எமர்ஜென்சிகளை பார்க்கத் தயார்: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே. தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழன் என்றொரு இனம் உண்டு; தனியே அவருக்கொரு குணம் உண்டு என்று கருப்பு கொடியேற்றி இன்று காட்டிவிட்டோம்.

இது வெறும் டிரைலர்தான். மெயின் பிச்சரை பார்க்கவேண்டும் என்று டெல்லி ஆசைப்படக்கூடாது.

தமிழர்கள் ரத்தத்தில் சூடு குறைந்துவிட்டது. தெருவில் இறங்கி போராடமாட்டார்கள் என நினைக்க வேண்டாம்.

தமிழருக்காக போராட யார் இருக்கான்னு நினைக்காதிங்க. இந்த முத்துவேல் கருணாநிதி இருக்கான்.

1000 எமர்ஜென்சிகளை பார்க்க தயார் என ஆவேசமாக தெரிவித்தார்.