திருமாவளவன்- முக ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து- மு.க.ஸ்டாலின்

தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட விழைகிறேன் என கூறியுள்ளார்.

தொல். திருமாவளவனுக்கு முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தொல். திருமாவளவனுக்கு முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட விழைகிறேன் என கூறியுள்ளார்.