தமிழக செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்: தோல்விக்கு பின் அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 105-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இதற்கிடையே, திமுக தலைமையிலான கூட்டணி 60 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். அமைச்சர்கள் பலரும் தோல்வி அடைந்துள்ளனர்.

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் சட்டசபை தேர்லில் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

SCROLL FOR NEXT