தமிழக செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார்? - மு.க.அழகிரி விளக்கம்

குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதன்பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார். நாளைமறுநாள் அவர் வீடு திரும்புகிறார் என்று தெரிவித்தார்.