மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் முன்னிலை வெற்றி வருகின்றன.
தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி, முதல் 4 சுற்றுகள் முடிவுகளில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அதன்பின் பின்தங்கினார். தற்போது 17 சுற்றுகள் முடிவில் தவெக வேட்பாளர் சத்யபாமா முதலிடம் இடத்தில் உள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 2-வது இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பானுமதி 3-வது இடத்தில் உள்ளார்.
மதுராந்தகத்தில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 10 வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்று வெற்றி பெறும் தருவாயில் உள்ளார்.
இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன் பெண்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினார்.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ஐயுஎம்எல், மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டணி கட்சிக்கு கொடுத்திருக்க அங்கீகாரமாக தேர்தல் களத்தில் சுழன்று சுழன்று பணியாற்றினோம். இன்று வெற்றியை ருசித்து கொண்டிருக்கிறோம்.
தவெக தலைமையிலான மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் முதல் இடைத்தேர்தல் இது. இந்த இடைத்தேர்தலோடு வெற்றி நின்று விடாது. அடுத்து வர இருக்கின்ற கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சி நகரசபை தேர்தல், 2029 பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி தொடரும். தென்இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும்.
இவ்வாறு அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.