தமிழக செய்திகள்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு செப்டம்பர் 1 முதல் சம்பள உயர்வு- அமைச்சர் வினோத்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக புதிய டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20000 வழங்கப்படும்.

23 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களை கருத்தில் கொண்டு 4 முறை சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் அடிப்படையில், வரும் செப்.1 முதல் ரூ.33,023 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் அமைச்சர் வினோத் இன்று மானிய கோரிக்கையில் பேசுகையில் கூறியதாவது:-

டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் இத்துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தடுக்கவும் பணியாளர்களின் வாழ்வாதார தேவைகளை கவனத்தில் கொண்டும் இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் நான் நான்கு முறை சங்கப் பிரதிநிதிகள் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன்.

அந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையிலும் டாஸ்மாக் நிர்வாக குழுவின் முடிவின் அடிப்படையிலும் நான் மேலும் சில அறிவிப்புகளை இந்த சட்டமன்ற பேரவையில் வெளியிடுகிறேன்.

23 ஆண்டுகளாக தொடர்ந்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு செப்டம்பர் 1 முதல் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது 23 ஆண்டுகளாக 2000 ரூபாயில் ஆரம்பித்து கடைசி வரை 14,000 ரூபாய் வரைக்கும் இந்த 23 ஆண்டுகள் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து இருக்கிறோம் சரியான ஊதியம் கொடுக்கணும் என்ற அடிப்படையில் மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து 23 ரூபாயும் விற்பனையாளர்களுக்கு 30,284 ரூபாயும் உதவி விற்பனையாளர்களுக்கு 28,680 உயர்த்தி வழங்கப்படும்.

இதன்மூலம் ஆண்டொன்றிற்கு அரசுக்கு ஏற்படும் செலவு ரூ.486.90 கோடி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக புதிய டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20000 வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு வரும் மூன்று சீருடைகள் துணி மற்றும் தையல் செலவிற்காக ரூ.6000 வழங்கப்படும்

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் தூய்மை பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் மாநகரக் கடைகளுக்கு ரூ.5000 நகராட்சி பேரூராட்சி கடைகளுக்கு ரூ.4000 கிராமப்புற கடைகளுக்கு ரூ.3000 சில்லறை செலவினங்களை மேற்கொள்ள வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.