தீபாவளி பண்டிகைக்காக 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயணிகளின் வசதிக்காக முன்பதிவு மற்றும் செயலி மூலம் தகவல் அறியும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* நாளை முதல் 7-ந்தேதி வரை 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 7,427 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
* தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளோம்.
* பயணிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
* ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டனம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னையில் இருந்து 16 இடங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் இயக்கப்படும்.
* முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படும் என்பதை செயலி மூலம் அறியலாம்.
* தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர் திரும்ப 11,197 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றார்.