தமிழக செய்திகள்

புரிதல் இல்லாமல் அ.தி.மு.க.வினர் புகார் கூறுகின்றனர்- அமைச்சர் சிவசங்கர்

மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை.அதிக விலை கொண்ட பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மிகப்பெரிய செலவு ஏற்படும்.

மின்சார பேருந்து இயக்கம் தனியாருக்கு அளிக்கப்பட்டதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் என்ற அ.தி.மு.க.வினரின் புகாருக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அரசியல் காரணங்களுக்காக அ.தி.மு.க.வினர் தேவையற்ற புகாரை கூறி வருகின்றனர்.

* மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை.

* மின்சார பேருந்தின் விலை அதிகம் என்பதால் அதனை தனியார் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

* பராமரிப்பு பணியாளர்கள் இல்லாததால் தயாரிப்பு நிறுவனமே பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

* அதிக விலை கொண்ட பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மிகப்பெரிய செலவு ஏற்படும்.

* புரிதல் இல்லாமல் அ.தி.மு.க.வினர் புகார் கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT