தமிழக செய்திகள்

அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? - அமைச்சர் விளக்கம்

பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.நீதிமன்ற அறிவுரையின்படியே தற்போது மக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.

மாலை மலர்

அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.

* அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது.

* பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு விரும்பவில்லை.

* பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

* நீதிமன்ற அறிவுரையின்படியே தற்போது மக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.

* தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கருத்து கேட்டு நீதிமன்றத்திடம் விவரம் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.