தமிழ்நாடு அரசின் சார்பில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட 410 பேர் சென்னை திரும்பினர். அவர்களை அமைச்சர் ஷாஜகான் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார்.
பின்னர் அமைச்சர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய வக்பு சட்டம் தமிழ்நாட்டில் இனியும் அமல்படுத்தப்பட மாட்டாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை.
அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தவில்லை இனியும் அமல்படுத்த பட மாட்டாது.
புதிய சட்டப்படி முஸ்லிம் அல்லாத ஒருவர் வக்பு வாரியத்தில் உறுப்பினராக தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தவில்லை. இனியும் அமல்படுத்த பட மாட்டாது.
உமித் போர்ட்டலில் வக்பு சொத்துக்களை பதிவேற்றம் செய்ய பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
வக்பு சொத்துகளை பதிவேற்றம் செய்யும் காலக் கெடுவும் நிறைவடைந்த நிலையில் மறுபரிசீலனை செய்ய மத்திய அரசிடம் கேட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.