தமிழக செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்வாகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சென்னை:

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ந்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதயத்தில் அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஐசியுவில் அவர் உள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT