கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.
மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருவாய் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி கலையும் என்று ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்து பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த தளபதி இருக்கும் வரை அவர் தான் நிரந்தர முதலமைச்சர், ஆர்.எஸ் பாரதி சொல்வது போல், ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை, தி.மு.க.வினருக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன.
தமிழக இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றி வாய்ப்பு எட்டுவோம், தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அதனை தீர்ப்பதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம் விரைவில் மின் உற்பத்தி அதிகரிக்கும்.
கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள். மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் விஜய் உடல் மொழி கிண்டல் செய்தது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், 2017-ம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் தனபால் அறையில் சேரை இழுத்து கீழே தள்ளி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அராஜகம் எல்லோருக்கும் தெரியும், எனவே, அதனைப் பற்றி எல்லாம் பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.