தமிழக செய்திகள்

இந்தி பேசும் வடமாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்

இடைத்தேர்தலில் தவெக வெற்றி உறுதி, வாக்கு வித்தியாசம் எந்தளவுக்கு போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மக்கள் பிரச்சனை குறித்து சட்டசபையில் பேசவில்லை என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

ஈரோட்டு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

* சட்டம்-ஒழுங்கு காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மக்கள் விருப்பங்களை பிரதிபலிக்கும் முதல்வராக விஜய் உள்ளார்.

* இடைத்தேர்தலில் தவெக வெற்றி உறுதி, வாக்கு வித்தியாசம் எந்தளவுக்கு போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

* பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் மின்வெட்டு குறைவு, மற்ற மாநிலங்களில் 20 நாட்களாக கூடுதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

* சோலார் மூலம் பெறும் மின்சாரத்தை இரவிலும் பயன்படும் வகையில் சேமித்தால் தமிழகம் மின்மிகை மாநிலமாகும்.

* பேரவையில் எம்எல்ஏக்கள் என்ன பேசினார்கள் என்பதை அனைவரும் கண்கூடாக பார்த்தனர்.

* இந்தி பேசும் வடமாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் அதிகமாக உள்ளது.

* முதலமைச்சர் விஜய் வெளிநாடுகளுக்கு சென்று ரூ.11,000 கோடி அளவுக்கு தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT