தமிழக செய்திகள்

வரும் தேர்தல்களில் த.வெ.க.வுக்கு எதிர்கட்சியே இருக்காது- அமைச்சர் செங்கோட்டையன்

என் உயிர் உள்ளவரை த.வெ.க.வில் தான் இனிமேல் இருப்பேன். நிரந்தர முதலமைச்சர் விஜய் தான். அதற்காக என் உயிரையும் கொடுத்து பாடுபடுவேன்.

விஜய் சேப்பாக்கம் சென்று இருந்தால் உதயநிதி ஸ்டாலின் அவ்வளவு தான். நேரம் பத்தவில்லை. 10 மாவட்டங்களுக்கு விஜய் சென்று இருந்தால் கொளத்தூர் போலதான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கலாம். காவல்துறை அனுமதி அளிக்காததே இதற்கு காரணம்.

தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது கூறியதாவது:-

சவுக்கடி

எடப்பாடி பழனிசாமி நல்ல காரியமாக என்னை நீக்கம் செய்ததால் தான் நான் இங்கு உள்ளேன். தற்போது சட்டசபையில் எனக்கு நேராக அமர்ந்து இருக்கிறார். நான் பார்த்தால் தலையை குனிந்து கொள்கிறார். வெட்க்கப்படுகிறார். ஏன், செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினோம் என்று இப்போது நினைக்கிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு சவுக்கடி கொடுத்துள்ளார் சத்தியபாமா.

உடுமலை ராதாகிருஷ்ணன்

உடுமலை ராதாகிருஷ்ணன் தோல்வியால் வீட்டில் இருந்தார். ஆனால் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். 9 முறை வெற்றிபெற்ற என்னை தூக்கி விட்டார். அவரை கை காட்டி அரசியலுக்கு கொண்டு வந்த நான் தடுமாறி நின்றேன். எடப்பாடி பழனிச்சாமி ஒய்வு காலத்தில் ஆடி வருகிறார். எடப்பாடி தொகுதியில் அருண் என்ற வேட்பாளர் பெட்டி வாங்கிகொண்டு ஓடி விட்டார்.

உதயநிதி ஸ்டாலின்

என் உயிர் உள்ளவரை த.வெ.க.வில் தான் இனிமேல் இருப்பேன். நிரந்தர முதலமைச்சர் விஜய் தான். அதற்காக என் உயிரையும் கொடுத்து பாடுபடுவேன். விஜய் சேப்பாக்கம் சென்று இருந்தால் உதயநிதி ஸ்டாலின் அவ்வளவு தான். நேரம் பத்தவில்லை. 10 மாவட்டங்களுக்கு விஜய் சென்று இருந்தால் கொளத்தூர் போலதான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கலாம். காவல்துறை அனுமதி அளிக்காததே இதற்கு காரணம்.

எதிர்கட்சி இருக்காது

ஓட்டலில் செங்கோட்டையன், நான், திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென மலைப்பாம்பை போல கீழே விழுந்து பதவிக்கு வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. திடீர் என்று விழுந்தார் நானே பயந்துவிட்டேன். வரும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கவே மாட்டார். தி.மு.க., உதயநிதி ஸ்டாலின் என யாரும் இருக்க மாட்டார்கள். இனிமேல் எதிர்க்கட்சி என்று என்பதே இல்லை.

மதுராந்தகம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு பிறகு இடைத்தேர்தலில் போட்டியிட கட்சியே இருக்காது. காங்கிரஸ் கட்சியினர் கடைசியில் சொதப்பிவிட்டனர் . இல்லையென்றால் 234 தொகுதிகளிலும் வெற்றி தான்.

வருத்தப்படுகின்றனர்

நான் அப்போதே கூறினேன் கே.வி.ஆர். ராமலிங்கம், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரை கட்சிக்கு வருமாறு அழைத்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை கே.வி. ராமலிங்கம் ஒரு கல்யாணத்தின்போது உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதி ஆகிவிட்டார். அதனால் அவரும் நினைவில்லை. தற்பொழுது அனைவரும் வருத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ், பர்வேஷ், ரமேஷ், ராஜேஷ் கரூர் எம்.பி.ஜோதிமணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT