தமிழக செய்திகள்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

24-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை முதலமைச்சர் சாமர்த்தியமாக கையாள்வார்.

சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து வருவாய் பேரிடர் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* நிவாரண முகாம்கள், பொதுமக்களுக்கு வழங்க தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* நீர்வளத்துறை பேரிடர் துறையுடன் இணைந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு இழப்பீடு வழங்க கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

* 24-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* புயல் உருவாவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

* கனமழை, இடி, மின்னல் தாக்கியதில் 1-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை 31 பேரி பலி, 47 பேர் காயம் அடைந்துள்ளனர்.

* வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன.

* வடகிழக்கு பருவமழையை முதலமைச்சர் சாமர்த்தியமாக கையாள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT