தமிழக செய்திகள்

அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார்

அரசு பணியிடங்களை நிரப்ப தனி செயலி உருவாக்கப்படும் என்றார் அமைச்சர் சரத்குமார்.

அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என அமைச்சர் சரத்குமார் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பதிலளித்துப் பேசியதாவது:

அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும்.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்காக வெற்றி பாதை செயலி உருவாக்கப்படும்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் சமூக ஊடக கண்காணிப்பு மையம் ஏற்படுத்துதல்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் கண்காணிப்பு அறையுடன் கூடிய சிசிடிவி கேமரா அமைப்பு ஏற்படுத்துதல்.

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் நவீன கணினி மையம் உருவாக்குதல்.

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைத்தல்.

அரசுப் பணியாளர்களுக்கான இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சியில் கூடுதலாக சட்டம் மற்றும் விதிகளை இணைத்தல்.

போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை அறிவுசார் மையங்களுடன் இணைத்தல்.

எளிமை ஆளுமைத் திட்டத்தின்கீழ் 150 அரசு சேவைகள் வழங்குதல்.

டிஎன்பிஎஸ்சி கூடுதல் இணைப்பு கட்டிடம் ரூ.5.12 கோடி செலவில் கட்டப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

SCROLL FOR NEXT