தமிழக செய்திகள்

இந்தியாவின் கடனை இன்றே அடைக்க யோசனைக்கூறிய அமைச்சர் சரத்குமார்!

மார்ச் 2027-க்குள் ரூ. 214 லட்சம் கோடியாக இந்தியாவின் கடன் மதிப்பு உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்தக் கடன் தொகை 2027ம் ஆண்டில் ரூ. 214 லட்சம் கோடியாக இருக்கும் என 2026-27ம் ஆண்டு நிதியாண்டு அறிக்கை தாக்கலில் மத்திய அரசு தெரிவித்தது.

மார்ச் 2026 வரை மொத்தக் கடன் ரூ.197 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், மொத்த நிலுவைக் கடன்கள் ஓராண்டில் கிட்டத்தட்ட ரூ. 17.6 லட்சம் கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழ்நாடு அரசின் கடனும் சமீப காலமாக பெரும் விவாதப்பொருளாக மாநில அரசியலில் உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மொத்த கடன்தொகை தற்போதுவரை ரூ.13.18 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் கடனே இன்றே அடைக்கலாம் என தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஒரு யோசனையை வழங்கியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அவர்.,

“முதலமைச்சரின் சேவையை பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால், இந்தியாவின் கடனை இன்றே அடைக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.