ரிஷிவந்தியத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்படுமா? என்ற உறுப்பினர் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறுகிறது. மேலும் திருமருகல் பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்தது குறித்து ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார்.
முதலில் வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். முதலில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு உள்ளன. ஆம்பூர் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்த மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.
பண்ருட்டி மருத்துவமனைக்கு Freezer Box மற்றும் CT Scan வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், பண்ருட்டி மருத்துவமனைக்கு 2 Freezer Box மற்றும் தேவை இருப்பின் CT Scan வசதி ஏற்படுத்தி தரப்படும். கடலூர் மருத்துவமனைக்கு நிகராக பண்ருட்டி மருத்துவமனையை தரம் உயர்த்த ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், வள்ளியூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தலைவாசல் தாலுகாவிற்கு புதிய மருத்துவமனை வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு தலைவாசல் தாலுகாவுக்கு மருத்துவமனை கட்டிக்கொடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்து நடவடிக்கை என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
ரிஷிவந்தியத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்படுமா? என்ற உறுப்பினர் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு, மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.