வெளிச்சந்தையில் ஒரு யூனிட்டுக்கு ரூ.41.50 க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50 என்ற வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு வாங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சுமார் 2,100 மெகாவாட் மின்சாரம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்படுகிறது.2026 டிசம்பர் முதல் 2027 மே மாதம் வரை காலகட்டத்தில், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் மின் தேவையை சமாளிக்க இந்த மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் குறிப்பிடப்பட்டுள்ள 37 முதல் 41 ரூபாய் வரையிலான விலையில் நாங்கள் மின்சாரத்தை வாங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
குறித்து அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது
இன்று டெண்டர்களைத் திறந்து பார்த்தபோது, பல விற்பனையாளர்கள் மிக அதிக விலையைக் கோரியுள்ளனர். அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரம் எங்களிடம் போதுமான அளவில் இருப்பதாலும், அடுத்த கோடைகாலத்திற்காக மின்சாரம் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருவதாலும், இந்த விலைகள் நியாயமற்றவை. இதற்கிடையில், வரவிருக்கும் 20 ஆண்டுகளுக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால டெண்டர்களை நாங்கள் வெளியிடவுள்ளோம்.
எனவே, இனி அதிக விலையில் எரிவாயு (மின்சார உற்பத்திக்கான எரிபொருள்) கொள்முதல் செய்யப்படமாட்டாது; மேலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்யுமாறு நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்