தமிழக செய்திகள்

பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல் செங்கோட்டையன் - அமைச்சர் ரகுபதி

த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு அசைன்மென்ட்.தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது.

மாலை மலர்

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன்.

* த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு அசைன்மென்ட்.

* அமித் ஷா அழைத்தால் ஓடுவார். இன்றைக்கும் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கிக்கொண்டிருப்பவர்.

* செங்கோட்டையனை பா.ஜ.க. ஏமாற்றி இருந்தால் அவர் ஏன் த.வெ.க.வுக்கு செல்ல வேண்டும்?

* செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முடிவிற்கு வந்த பிறகு நட்பு ரீதியில் வாருங்கள் என்று சேகர்பாபு அழைத்து இருக்கலாம்.

* தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.