பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவில் பக்தி பாடல்களை பாடிய சிறுமி தியாவுக்கு அமைச்சர் ரமேஷ் செல்போன் மூலம் வாழ்த்து தெரிவித்தார். தியாவின் இசைத்திறமை மற்றும் முருகப்பெருமான் மீதான பக்தியை பாராட்டிய அவர், கல்வியிலும் சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்தினார்.
தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேகம், திருவிழாக்களில் கந்தபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட பக்தி பாடல்களை இனிமையாக பாடி பலரது கவனத்தையும் ஈர்த்து வருபவர் சிறுமி தியா. நேற்று பழனி தண்டபாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது சிறுமி தியா கலந்து கொண்டு பக்தி பாடல்களை பாடினார். இந்த வீடியோ பல்வேறு தலங்களில் வெளியான நிலையில் சிறுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் நேற்று சிறுமி தியாவுக்கு பிறந்தநாள் என்பதால் அதற்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். சிறுமி தியாவின் இசைத்திறமையையும், முருகப்பெருமான் மீதான பக்தியையும் பாராட்டிய அமைச்சர் ரமேஷ் தொடர்ந்து கல்வியிலும் சாதனை படைக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
நேரில் சந்திக்க இயலாத காரணத்தால் செல்போன் மூலம் வாழ்த்து தெரிவிப்பதாகவும், விரைவில் நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு சிறுமி தியா நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது மகளுக்கு அமைச்சர் ரமேஷ் வாழ்த்து தெரிவித்தது சிறுமியின் பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.