திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.
ஸ்ரீரங்கம் கோவில் நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது.
* ஸ்ரீரங்கம் கோவில் நிலங்களை மோசடியாக பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
* போலி ஆவணங்கள் மூலம் ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் கோவில் நிலத்தை முறைகேடாக அபகரித்துள்ளார்.
* கோவில் நிலத்திற்கான மூலப்பத்திரத்தை காணவில்லை என முன்னதாக பதிவு செய்து பின்னர் அந்த இடத்தை அபகரித்துள்ளனர்.
* போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர்.
* கோவில் நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றிய திமுக நிர்வாகி அந்த இடத்தில் கட்சி அலுவலத்தையும் நடத்தி வருகிறார்.
* சாதாரண பகுதி செயலாளரால் ஒரு கோவில் நிலத்தை முறைகேடாக ஆக்கிரமிக்க முடியுமா? இவரின் பின்னால் இருப்பவர்கள் யார்?
* திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை.
* கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்தவரின் பின்னால் மிகப்பெரிய புள்ளிகள் சிக்குவர்.
* யார் சொல்லி யாருடைய ஆதரவில் இப்படியொரு மோசடி நடந்திருக்கிறது என விசாரணையில் கண்டறியப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.