திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 1,000 கட்டண தரிசன மோசடி மற்றும் புகார்களின் அடிப்படையில் அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், மரபு வழி அர்ச்சகர்களை அமைச்சர் ரமேஷ் இழிவுபடுத்தியதாகக் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
முறைகேடு செய்த அர்ச்சகர் நீக்கம் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்த நிலையில் அமைச்சர் ரமேஷ் பதிலடி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில்,
நேற்று வரை சாதி வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என கூறி, இன்று அதே சாதியை சார்ந்தோரை அவமதித்ததாக பேசுகிறீர்கள்.
மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கதான் மக்கள் வெற்றி பெற செய்தனர்.
சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்று சேவை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.