தமிழக செய்திகள்

அதிக கல்விக் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்- அமைச்சர் ராஜ்மோகன்

பள்ளிக்கல்வித்துறை திட்டங்களுக்கான டெண்டரில் முறைகேடு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை:

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

* பள்ளிக்கல்வித்துறையில் சில திட்டங்களில் லீக்கேஜ் இருக்கிறது. அவற்றை சரி செய்ய வேண்டிய தேவை உள்ளது.

* மாணவர்களுக்கு தரும் கல்வி உபகரணங்களில் ஊழல் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* பள்ளிக்கல்வித்துறை திட்டங்களுக்கான டெண்டரில் முறைகேடு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஊழல், முறைகேட்டை தடுத்து நிறுத்தினாலே கல்வி கனவு நனவாகிவிடும்.

* தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்.

* தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட்டே ஆக வேண்டும்.

* சிபிஎஸ்இ குறித்து வரும் புகார்கள் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

* தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.