அமைச்சர் ராஜ்மோகன் 
தமிழக செய்திகள்

புத்தக கொள்முதலில் ஊழல் நடந்தது திமுக ஆட்சியில் தான் - அமைச்சர் ராஜ்மோகன்

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து திமுக எம்.பி. கனிமொழி ஏன் பதிலளிக்கவில்லை?

தமிழ்நாட்டில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவோம் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

டெல்லியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பெரியார் அறிவுலகம் மட்டுமல்லாது பல நூலகங்களில் முறைகேடு நடந்துள்ளது.

* கன்னிமாரா நூலகத்தில் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை நானே பறிமுதல் செய்தேன்.

* கடந்த மார்ச் மாதத்திலேயே புத்தக கொள்முதல் முடிந்து விட்டது.

* கன்னிமாரா நூலகத்தில் 550 ஏஐ புத்தகங்கள் கண்டுபிடித்துள்ளோம், அங்கு அந்த புத்தகத்தை வைத்தது யார்?

* பெரியார் நூலக நூல் கொள்முதல் குறித்து திமுக பேசாதது ஏன்? திமுகவில் வாசிப்பாளர்கள் எழுத்தாளர்கள் இல்லையா?

* பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து திமுக எம்.பி. கனிமொழி ஏன் பதிலளிக்கவில்லை?

* நூலகங்களில் புத்தக கொள்முதலில் ஊழல் நடந்தது திமுக ஆட்சியில் தான்.

* நீதிமன்றம் அறிவுறுத்தியதால் தான் திமுக ஆட்சியில் புத்தகம் கொள்முதலுக்கு குழு அமைக்கப்பட்டது.

* தவெக ஆட்சி காலத்தில் ஒரு புத்தகம் கூட கொள்முதல் செய்யப்படவில்லை.

* நாங்கள் புத்தகங்களை கொள்முதல் செய்தால் இத்தகை குப்பைகளை வாங்கவே மாட்டோம்.

* தமிழ்நாட்டில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவோம்.

* கைப்பற்றப்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT